Saturday 3 March 2018

பல் வலிக்கு வீட்டிலேயே இருக்கு பாட்டி வைத்தியம்


பல் வலிக்கு வீட்டிலேயே இருக்கு பாட்டி வைத்தியம்!

பல்வலியை வீட்டிலேயே இருக்கும் சில பொருட்களின் மூலம் எப்படி குறைக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
பல் வலிக்கு கிராம்பு தைலம் சிறப்பான மூலிகை மருந்தாகும். கிராம்பு தைலத்துடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் கலந்து, பல்லின் பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் வைக்கவேண்டும்.
கடுகு எண்ணை, பல்வலியை குறைக்க மற்றொரு எளிய நிவாரணி. கடுகு எண்ணையுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து பாதிக்கப்பட்ட ஈறுகளின் மேல் தடவி வந்தால் விரைவில் பல்வலி குணமாகும்.
எலுமிச்சை சாரின் துளிகள் பல் வலியை குறைக்கும். வெங்காயத்தின் ஒரு துண்டை பாதிக்கப்பட்ட ஈறு அல்லது பல் பகுதியின் மேல் வைப்பதன் மூலம் பல் வலியை எளிதில் குறைக்க முடியும். பல் வலியை சற்று குறைக்க வெளிப்புறமாக ஐஸ் கட்டிகளை பயன்படுத்தலாம்.
பல் வலி வந்துவிட்டால் சூடான, மிகவும் குளிர்ச்சியான, மற்றும் இனிப்பான உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கவும். அதிகமாக காய்கரிகள், பழங்கள், தானியங்கள் போன்றவைகளை சாப்பிட வேண்டும். மாவு உணவுகளையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.



No comments:

Post a Comment