Wednesday 28 February 2018

அதிகபடியான சளி மற்றும் தடுமலை போக்க எளிய வலி




அதிகபடியான சளி மற்றும் தடுமலை போக்க எளிய வலி

சளி மற்றும் தடுமல் என நாம் தினமும் கேட்பதால் அது ஒரு சாதாரண விஷயம் போல் ஆகிவிட்டது ஆனால் அதிகபடியான சளி மற்றும் தடுமல் உள்ளவர்களுக்கே தன் அந்த கஷடம் தெரியும்.


இந்த நிலைமை பெருகி விட்டால் இது போன்ற ஒரு கொடிய வியாதி இல்லை என்று கூட குறிப்பிடலாம் அப்படிப்பட்ட இந்த சளி மற்றும் தடுமலை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு எவ்வாறு விரட்டியடிப்பது எனப் பார்ப்போம்.


மஞ்சள் பொடி

மஞ்சளில் மருத்துவ குணம் நிறைய உண்டு இது பக்டீரியாவை எதிர்த்து போராடுகின்றது  தொற்று மற்றும் தொண்டை வலி என்பவற்றையும் இந்த மஞ்சள் எளிதில் குணமாக்கும் வல்லமை கொண்டது.
தேவையான பொருட்கள்
ஒருடீஸ்பூன் மஞ்சள், அரைடீஸ்பூன் உப்பு, ஒரு கோப்பை இளஞ்சூடான தண்ணீர்
செய்முறை
ஒரு கோப்பை இளஞ்சூடான தண்ணீரில் மஞ்சள் மற்றும் உப்பு போன்றவற்றை கலக்கவும். இந்த கலவையை நாளொன்றுக்கு 3 – 4 முறை குடித்து வந்தால் சளி மற்றும் தடுமல் இல்லாமல் போய்விடும்.


இஞ்சி

மஞ்சளைப் போலவே இந்த இஞ்சிக்கும் மருத்துவ குணம் நிறைய உண்டு. இஞ்சி உடலில் சேர்வதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து பல வியாதிகள் குணமாக்கப்படும்.
தேவையான பொருட்கள்
இஞ்சி 6 – 7துண்டுகள், ஒருடீஸ்பூன் மிளகு, ஒருடீஸ்பூன் தேன், 02 கோப்பை தண்ணீர்
செய்முறை
இரண்டு கோப்பை தண்ணீரை கொதிக்க வைக்கவும் தண்ணீர் நன்கு கொதிக்கும் போது  இஞ்சி மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து மூடி வைக்கவும் ஒரு நிமிடத்திற்கு பின்னர் அடுப்புச் சூட்டை குறைத்து 5 – 7 நிமிடங்கள் வைத்திருக்கவும்  பின்னர் அந்த தண்ணீரை வடிகட்டி அதனுடன் தேனை சேர்க்கவும்.


ஆப்பிள் சாறு வினிகர்

சளி உற்பத்தியாவதை தடுக்கும் வல்லமை இந்த ஆப்பிள் சாறு வினிகருக்கு உண்டு.
செய்முறை
ஒரு கோப்பை தண்ணீரில் ஒரு ஒருடீஸ்பூன் ஆப்பிள் சாறு வினிகரை சேர்க்கவும். அதனை நன்கு கலக்கி நாளொன்றுக்கு இயன்ற வரை குடித்து வரவும். இவ்வாறு செய்வதன் மூலம் தடுமல் இல்லாமல் ஆகிவிடும். இந்த தண்ணீரால் வாயை கொப்பளிப்பது கூட சிறந்தது.


ஆவி பிடித்தல்

ஆவி பிடிப்பதன் மூலம் தொண்டைப் பகுதியில் உள்ள சளி உருகி விடும் இதன் மூலம் தொண்டைப் பகுதியில் உள்ள அடைசல் இல்லாமல் போகும்.


தேன் மற்றும் எலுமிச்சை சாறு

பொதுவாகவே சளி மற்றும் தடுமலுக்கு எலுமிச்சை சாறு இன்றியமையாதது. அதில் உள்ள விட்டமின் சி, தடுமலை அழிக்கின்றது
தேவையான பொருட்கள்
ஒருடீஸ்பூன் தேன், இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறு
செய்முறை
மேற்குறிப்பிட்டவற்றை ஒரு பாத்திரத்தில் இட்டு நன்கு கலக்கிக் கொள்ளவும். இந்தக் கலவையை நாளொன்றுக்கு மூன்று முறை குடித்து வர சளி மற்றும் தடுமல் இல்லாமல் போய்விடும்.



No comments:

Post a Comment