Friday 16 November 2018

Benefits Of Sphaeranthus Indicus Herb





உலக ஆராட்சிக்கே சவால் விடும் நம் தமிழரின் கண்டுபிடிப்பு, எளிதில் கிடைக்கும் அந்த மூலிகை என்ன என்பதை பார்ப்போம்.

மூலிகையின் பெயர் –: கொட்டக்கரந்தை.

கொட்டக்கரந்தை ஈரமான வளமான இடங்களில் வளரக்கூடியது. முக்கியமாக வயல்களில் நெல்லுடன் கழையாகவும் வரப்போரங்களிலும் வளரக்கூடியது.
இதன் தாயகம் ஆப்பிரிக்கா. இது சுமார் 30-60 செ.மீ.உயரம் வளரக்கூடியது. பற்களுள்ள நறுமணமுடைய இலைகளை மாற்றடுக்கில் கொண்ட சிறு செடி.
 இது அதிக கிளைகளைக் கொண்டிருக்கும். தண்டு உருண்டையாக இருக்கும்.
இலையின் நீளம் 2-7 செ.மீ ம், அகலம் 1 – 1.5 செ.மீ. கொண்டது. பிரவுன் மற்றும் பச்சையாக இருக்கும்.

 பூ தனியாக தண்டின் உச்சியில் குஞ்சம் போன்று சிறு பந்து போன்று உரண்டையான சென்நிறப் பூ கொத்தினை உடையது.
பூ உருண்டையாக கத்தரிப்பூ நிறத்தில் இருக்கும். வெளிபக்கப்பூ பெண் பூக்கள் மத்தியில் நீண்டிருபது தன்மகரந்தசேர்க்கையைக் கொண்டது.

நவம்பர் முதல் மார்ச்சு வரை பூத்துக் காய்க்கும். பழம் வாசனையுடையது, குவிந்திருக்கும். நாட்பட்டால் வாசனை மறைந்து விடும்.

மருத்துவப்பயன்கள் கொட்டக்கரந்தை மலமிளக்கவும், தாது வெப்பு தணிக்கவும் பயன்படும். நுரையீரல் நோய், யானைக்கால் வியாதி, இரத்த சோகை, கற்பப்பையில் வலி, மூலம், ஆஸ்த்துமா, வெண்புள்ளி, வயிற்றுக்கடுப்பு, வாந்தி, இருமல், விரைவீக்கம் நோய், மூத்திரப்போக்கு, பெருகுடல் வலி, கொங்கை தளர்ந்து தொங்குதல், பைத்தியம் மற்றும் 'எயிட்ஸ்'ஆகிய நோய்களைக் குணப்படுத்தக் கூடியது. இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். வண்டுகடி, இருதய நோய் குணமாகும். இதன் வேரில் ஆயில் எடுத்து உடம்பின் மேல் பூசினால் கண்டமாலை (Scrofula) குணமாகும். பூ கண் பார்வையை அதிகப்படுத்தும். தோல் வியாதி குணமடையும். இதன் விதை மற்றும் வேரின் பொடி குடல் புழுவை (Anthelmintic) அழிக்கும்.

கொட்டக்கரந்தையின் பூக்காத செடிகளைப் பிடுங்கி நிழலில் உலர்த்தி. பொடி செய்து 5 கிராம் பொடியுடன் சிறிது கற்கண்டுப் பொடி கலந்து சாப்பிட்டு வர வெள்ளை உள் ரணம்,, கிராணி, கரப்பான் ஆகியவை தீரும். நீடித்துச் சாப்பிட்டு வர மூளை, இதயம், நரம்பு ஆகியவற்றைப் பலப்படுத்தும்.
மேற்கண்ட பொடியுடன் கரிசிலாங்கண்ணிப் பொடி சமன் கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர இள நரை தீரும். உடல் பலம் பெறும்.
குணம்கொட்டைக் கரந்தைக்கு வெள்ளை, ஓழுக்குப் பிரமேகம், சினைப்பு, கிரந்தி, கரப்பான் இவைகள் நீங்கும். வெளிவராமல் தங்கிய மலத்தைப் போக்கும்.

No comments:

Post a Comment