Saturday 3 March 2018

வாழைப்பு வின் மருத்துவ பயன்கள்


வாழைப்பு வின் மருத்துவ பயன்கள்




வாழைப்பு வில் துவர்ப்புச்சத்து அதிகம் உள்ளது. அதனால் வாழைப்பு வை சாப்பிட்டு வந்தால் வைட்டமின் பி கிடைக்கிறது. துவர்ப்புச் சத்துக்களால் பல வியாதிகள் குணமாகும்.
வாழைப்பு வை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கின்றது. இரத்தம் சுத்தமாகிறது. இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
மேலும் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. இதனால் இரத்தத்தில் ஆக்ஸிஜன் வாயு அதிகரிக்கிறது. உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை கொடுக்கிறது. இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் 


ஏற்படாமலும் தடுக்கிறது
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பு  உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள 


சர்க்கரையின் அளவு குறைகிறது.
வாழைப் பு வை அதிக அளவில் உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகமாகும்.
மூலநோயினால் பாதித்தவர்களுக்கும், மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு 


சிறந்த மருந்தாக வாழைப்பு பயன்படுகிறது.
வாழைப்பு  மலச்சிக்கலைப் போக்கும். சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணை விரைவில் ஆற்றும் தன்மை உடையது.


வாழைப்பு வை உணவில் சேர்த்து வந்தால் பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள், மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்கள் விரைவில் குணமாகும்.


மேலும் இதுபோன்ற பயனுள்ள பதிவுகளை அறிய  வேல் டிவியை
subscribe செய்யவும் நன்றி !!!


No comments:

Post a Comment