Saturday 3 March 2018

நோய்களை குணமாக்கும் அதிசய செடி:



நோய்களை குணமாக்கும் அதிசய செடி:

தூய்மையின் அடையாளமாக கருதப்படும் தும்பைச் செடி இனத்தில் மற்றொரு நன்மை தரும் செடியும் உண்டு அதுதான் பேய்மிரட்டி எனும் பெருந்தும்பை.
சில அரிதான செடிகளை மனிதர்களுக்கு மிகுந்த நன்மைகள் அளிக்கும் மூலிகைகள்  பெரும்பாலும் சாலையோரங்கள் வயல்வெளிகள் மற்றும் தோட்டங்களில் சர்வசாதாரணமாகக் கண்டு வந்திருப்போம்
ஆனால் அதற்கெல்லாம் விதிவிலக்கு இந்தப் பேய்மிரட்டி வெகு எளிதில் நம் கண்களில் படாது மிக அரிதாக புதராக மற்ற செடிகள் மண்டியிருக்கும் ஒருசில இடங்களில் மட்டும் காணப்படும்

பேய்மிரட்டி செடி  சற்றே நீண்ட இளம்பச்சை வண்ண நிறமுடைய இலைகளையுடைய பேய்மிரட்டியின் மலர்கள் வெளிர் ஊதா போன்ற வயலெட் வண்ணத்தில் கொத்துக்களாக மலர்ந்திருக்கும். அதிக தண்ணீர் தேவையின்றி வறட்சியிலும் வாடாமல் வளரும் பேய்மிரட்டி செடி அதிக உயரம் வளர்வதில்லை மூன்றடி மட்டுமே வளரும் தன்மை உடையது

இந்த பேய்மிரட்டி செடி சற்று  சுவாசத்திற்கு இடையூறான வாடையைக் கொண்டிருக்கும் அவற்றின் காரணமாக மலத்தைக் குறிக்கும் பேச்சு மொழியில் கிராமங்களில் கொச்சையாக இந்த செடியை பெயரிட்டு அழைத்து வருகின்றனர்.

பேய்மிரட்டி செடியில் ஆற்றல்மிக்க அனிசொமிக்(Anicomik), ஜெரானிக்(Jeranik) 
மற்றும் லுட்டுலினிக்(Luttulinik) போன்ற அமினோ அமிலங்களும், 
சைட்டோஸ்டீரால்(If caittostir) போன்ற நலம் தரும் தாதுக்களும் 
அடங்கியுள்ளன.
செரிமானமின்மை இந்த தாதுக்கள் உடலில் செரிமானத்தை அதிகரித்து 
செரிமானமின்மை பாதிப்பால் ஏற்படும் உடல் வியாதிகளைக் 
கட்டுப்படுத்துகின்றன பேய்மிரட்டியின் பொதுவான மருத்துவ குணங்களாக 
வாதம் எனும் கெட்டகாற்றை உடலில் இருந்து வெளியேற்றும் தன்மை 
மிக்கது உடலில் உள்ள நச்சுநீரை வியர்வையின் மூலம் வெளியேற்றும் 
ஆற்றல்மிக்கது உடலில் ஏற்படும் அசதி சோர்வு மற்றும் தளர்ந்த உடலை 
வலுவாக்கும் தன்மை மிக்கது பேதி வயிற்றுப் போக்கு மற்றும் காய்ச்சலை 
 தணிக்கும்.
பேயை விரட்டிய பேய்மிரட்டி.
முற்காலங்களில் மன நிலை பாதிக்கப்பட்ட பெண்களை பேய் பிடித்திருக்கிறது
 என்று சொல்லி இதற்கெனவே இருக்கும் ஸ்பெசலிஸ்ட் பூசாரி 
வேப்பிலையால் அந்தப் பெண்ணின் தலையில் ஆவேசமாக ஓங்கி
 அடித்து ஓடிப்போ பேயே இந்தப் பெண்ணை விட்டு என்று கர்ஜித்து 
விரட்டும்போது சமயங்களில் வேப்பிலை இல்லையெனில் அதற்கு பதிலாக
 உபயோகிக்கும் ஒரு சக்திமிக்க இலைதான் பேய்மிரட்டி இதன் காரணமாகவே
 பேய்மிரட்டி என்று அழைத்தனர் மனிதர்களைப் பிடித்த பேயையே ஓட 
விரட்டிய பேய்மிரட்டி மனிதர்களின் உடலில் உள்ள வியாதிகளை நிச்சயம் 
விரட்டும் தானே பேய்மிரட்டியின் இலைகள் மலர்கள் தண்டு மற்றும் 
வேர்கள் மிக்க மருத்துவப் பலன்கள் மிக்கவை.
பேய்மிரட்டி சூரணம் .
பேய்மிரட்டியின் சமூலம் எனும் இலை மலர்கள் தண்டு மற்றும் வேர் 
உள்ளிட்ட முழுச்செடியை நன்கு உலர்த்தி அதை நன்கு அரைத்துத் தூளாக்கி
ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பேய்மிரட்டி காய்ச்சி பருகும் முறை.
 இதன் சூரணத்தை சிறிது எடுத்து நீரில் இட்டு காய்ச்சி தினமும் இரு வேளை பருகி வர செரிமான பாதிப்புகளால் ஏற்பட்ட வாந்தி விலகும் உடல் சூட்டால் ஏற்பட்ட காய்ச்சல் வறட்டு இருமல் மற்றும் வயிற்றுப் போக்கு பாதிப்புகள் விரைவில் குணமாகும். 
ஒரு பாத்திரத்தில் பேய்மிரட்டி சூரணத்தை சிறிது இட்டு அதில் நீர் சேர்த்து 
நன்கு கொதிக்கவிட்டு சுண்டி வந்ததும் தினமும் இரு வேளை இந்த நீரை சிறு
குழந்தைகளுக்கு கொடுத்தால் சூட்டினால் ஏற்பட்ட பேதி குணமாகும்.
கடுமையான தலைவலிக்கு.
 
பேய்மிரட்டி சூரணத்தை சிறிது எடுத்து சுடுதண்ணீரில் ஆவி பிடித்துவர 
கடுமையான தலைவலி தீர்ந்து விடும் உடலில் உள்ள நச்சுநீர் வியர்வையாக
வெளியேறிவிடும்.
பேய்மிரட்டி இலைகளின் மருத்துவப் பலன்கள்.
 
பேய்மிரட்டி இலைகளை நீரில் இட்டு காய்ச்சி அந்த நீரில் ஆவி பிடித்துவந்தால்
காய்ச்சல் விலகும் சளி காய்ச்சல் குணமாகும்.
குழந்தைகளின் பேதியைக் கட்டுப்படுத்த.
சிறிது ஓமம் மற்றும் மிளகு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் இட்டு நன்கு
 வறுத்து அதில் அரை லிட்டர் தண்ணீர் விட்டு கொதித்ததும் அதில் பேய்மிரட்டி
 இலைகளை ஒன்றிரண்டாக கைகளால் பிரித்து நீரில் இட்டு கொதித்து 
வந்ததும் அந்த நீரை தினமும் இரண்டு அல்லது மூன்று வேளை 
தேவைக்கேற்றபடி குழந்தைகளுக்கு கொடுத்துவர குழந்தைகளின் பேதி 
நிற்கும் பல் முளைக்கும் நேரங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் பேதிக்கு
 இது நல்ல மருந்து பேய்மிரட்டி இலைகளை சாறெடுத்து அதை சுடுநீரில் 
கலந்து கொடுத்தாலும் பல் முளைக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பேதியை 
இது தணிக்கும்.
அதிசய விளக்கு.
உடலின் வியாதிகள் போக்குவதில் பல்வேறு அரிய பலன்களைத் தரும் 
பேய்மிரட்டி மனிதனின் மன வியாதிகள் வெளிப்புற பாதிப்புகள் இவை 
நீங்கவும் பெரும் பலன்கள் தருகிறது நீண்ட வடிவத்தில் உள்ள 
பேய்மிரட்டியின் இலைகளை பறித்து அந்த இலைகளை நன்கு அலசி அதை 
சிறிய விளக்கில் வைத்து இந்த இலையைத் திரியைப் போல சுருட்டி 
விளக்கின் எண்ணையில் திரி போல வைத்து விளக்கேற்றி வர பச்சைத்திரி
மூலம், விளக்கு எரியும் என்கிறார்கள்.
நேர்மறை எண்ணங்கள்.
சில வீடுகளில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் இந்த விளக்கை 
ஏற்றி வைப்பார்கள் வீடுகளில் நல்ல நேர்மறை எண்ணங்கள் நிறைந்திருக்க 
இந்த முறையை அக்காலங்களில் செய்துவந்தனர் என்கின்றனர்.
கொசுக்கடியைப் போக்கும்.
 பேய்மிரட்டி அதிசய விளக்கை வீட்டில் அதிகம் கொசுத்தொல்லை உள்ள 
நேரங்களில் ஏற்றி வைக்க கொசுக்கள் விலகிவிடும் கொசுக்கடி இல்லாமல் 
நிம்மதியாக உறங்கலாம் பேய்மிரட்டி இலைகளைத் திரியாகக் கொண்ட இந்த
 விளக்கு நெடுநேரம் எரியும் எண்ணை எளிதில் தீராது என்பது இதன் தனிச்
சிறப்பு.
பேய்மிரட்டி வேர்.

 சில குழந்தைகள் பல் முளைத்து நடக்க ஆரம்பிக்கும் சமயங்களில் காணும்
 எல்லாம் அவர்களுக்கு ஆர்வமாகஇருக்கும் குப்பை மற்றும் எது கிடந்தாலும்
 அதை வாயில் போட்டு கடிக்கவே எண்ணும்  இதுபோன்ற நேரங்களில் 
கவனமாக குழந்தைகளைப் பாதுகாத்து வர வேண்டும் தவறிவிட்டால் எதை 
குழந்தை எடுத்து வாயில் இட்டது என்று தெரியாது ஆயினும் உடலில் 
ஏற்பட்ட கிருமிகளின் பாதிப்பால் குழந்தைகள் பசியின்றி உடல் வாடி அழ 
ஆரம்பிக்கும் என்ன காரணம் என்று கண்டுபிடிக்க முடியாமல், பெற்றோரும்
 வருந்துவர். 
பயத்தை விலக்கும் : 
இதுபோன்ற பாதிப்புகளுக்கு தீர்வளிப்பதில் பேய்மிரட்டி வேர்கள் 
உறுதுணையாக விளங்கும் பேய்மிரட்டி வேர்களை நன்கு அலசி 
தூய்மையாக்கி குழந்தைகள் கைகளில் கழுத்தில் நூல் கயிற்றில் 
கட்டிவைக்க குழந்தைகள் இந்த வேரை அவ்வப்போது வாயில் வைத்து 
சுவைத்து வர அதன் மூலம் குழந்தைகளின் வயிற்று வலி மற்றும் மனபயம் 
போன்ற பாதிப்புகள் விலகி நன்கு பசித்து சாப்பிடுவார்கள் உடல் நலமாகும்.
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
Please
Follow As In
Youtube: https://goo.gl/nU7en9
Facebook: https://goo.gl/SN7SWS
Blogger: https://goo.gl/SJHvh3

No comments:

Post a Comment