Sunday 25 March 2018

வெறும் வயிற்றில் காபி மற்றும் டீ-ஐ குடிக்கலாமா?




வெறும் வயிற்றில் காபி மற்றும் டீ- குடிக்கலாமா?
 உலக மக்களில் பலரும் காலையில் தூங்கி எழுந்தவுடன் காபி அல்லது டீ குடிப்பார்கள். ஆனால் வெறும் வயிற்றில் காபி அல்லது டீ குடிப்பது நமது உடலுக்கு நல்லதல்ல. எனவே காபி அல்லது டீ குடிப்பதற்கு முன்பாக ஒரு டம்ளர் நீரைக் குடிக்க வேண்டும். இதனை அதிகாலையில் மட்டுமின்றி, எப்பொழுது காபி மற்றும் டீ குடிப்பதாக இருந்தாலும் ஒரு டம்ளர் நீரைக் குடிக்க வேண்டும்.
பொதுவாக காபி அல்லது டீ குடிக்கும் போது, அது வயிற்றில் அசிட்டிட்டியின் அளவை அதிகரித்து, அல்சர் வரும் வாய்ப்பையும் மற்றும் புற்றுநோய் அபாயத்தையும் அதிகரிக்கும். ஆனால் நீரைக் குடிக்கும் போது, இப்பிரச்சனை தடுக்கப்படும்.
 காபி அல்லது டீ குடிப்பதற்கு முன் தண்ணீர் குடிப்பதால், இது வயிற்றில் அமிலங்களின் வீரியத்தைக் குறைத்து, வயிற்று சுவர்கள் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.
 காபி மற்றும் டீ குடிப்பதற்கு முன்பு நீரைக் குடிப்பதால், அவற்றிலுள்ள அதிகப்படியான அமிலத்தால் பற்கள் பாதிக்கப்படுவது குறையும். மேலும் உடல் நீர்ச்சத்தைப் பெறுவதோடு, டாக்ஸின்களும் வெளியேற்றப்படும்.
 டீ-யிலுள்ள பீனோலிக் (Phenolic)  உட்பொருட்கள் புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து உறிஞ்சுவதில் இடையூறை ஏற்படுத்தும். முக்கியமாக இரும்புச்சத்து குறைபாடு அல்லது இரத்தச்சோகை உள்ளவர்கள் வெறும் வயிற்றில் காபி அல்லது டீ அருந்தினால் பல்வேறு உடல்நலப் பாதிப்புகளுக்கு ஆளாவார்கள்.
காலையில் படுக்கையில் இருந்து எழுந்த உடனேயே டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் இருந்தால், அதை உடனே மாற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில் இப்பழக்கத்தால் வயிற்றில் அமிலங்களின் அளவு அதிகரிப்பதோடு, உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. மேலும் உடலில் டாக்ஸின்களும் அதிகரிக்கிறது.

இரவில் தூங்குவதற்கு முன்பாக டீ குடித்தால், இதிலுள்ள காப்ஃபைன் தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தி, இரவு தூக்கத்தைக் கெடுத்துவிடும்.
டீ-யுடன் கால்சியம் அல்லது இரும்புச்சத்து மாத்திரைகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது கால்சியம் மற்றும் இரும்புச்சத்தை உறிஞ்சுவதை தடுத்து உடல்நலப் பாதிப்புகளை உண்டாக்கும்.

No comments:

Post a Comment